பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

புதன், 31 மார்ச், 2010

என் காதலிக்கு எனது கண்ணீரில் பதில்


என் காதலிக்கு எனது கண்ணீரில் பதில்
பள்ளிப்படிப்பை முடித்து கல்லுரி முதல் ஆண்டு
கால் பதிக்கின்ற காத்திருக்கும் கால இடைவெளியில்
என்னவளைக் கண்டேன் !

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதிவிட்டு
தேர்வு முடிவு அறிவிப்பு வரும் வரை நான் எனது
சொந்தங்களின் உதவியுடன் ஒரு வேலைக்கு சேர்ந்தேன்
நான் வேலை செய்யும் இடத்தை நோக்கி வந்தால் என்னவள்!

நான் நிறைய புத்தகங்களில் படித்து இருக்குறேன்
காதல் ஈர்ப்பு என்னவென்று
உன்னை கண்ட மறுநொடி பொழுதுதில் என்னை நான்
மறைந்து விட்டேன் !

நீ தினமும் வரும் சாலையில்
நான் உன்னை பார்பதற்கு காத்திருந்த நாட்களை
அந்த பரபரப்பான நேரம் என் மனம் மட்டுமே
அறியும் !

நீ வராத நேரங்களில் சாலை ஓரம் எனது பார்வை
எத்தனை முறை பார்த்தது நீ வருவாய் என
எனக்கு மட்டும் தான் தெரியும் அந்த வலி
என் இதயத்துடிப்பை விட அதிகம் என்று !

உன்னிடம் நான் பேச வேண்டும் என்று
நினைக்கும் போது உன்னை பார்வையில்
என்னை கட்டி இழுத்து என்னை
தன் நிலை மறக்க செய்தாய்!

தேர்வும் முடிவு வந்து நான் தேர்ச்சி பெற்றேன் !
நல்ல கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது !
நான் மகிழ்ச்சி அடைந்தேன் ! காலம் முடிவு செய்தது
இதுதான் உனக்கு கடைசி மகிழ்ச்சி என்று எனது புரியவில்லை !

உன்னிடம் என் காதலை வெளிபடுத்தினேன்
நீ சரி என்றவுடன் எனக்கு நான் சொன்ன வார்த்தை
உன்னைவிட்டு பிரியப்போகிறேன் என்று ஏன் என்றாய் ?
படிப்பதற்கு என்றேன்!

காலத்தின் கட்டயத்தில் நாம் இருவரும் பிரிந்தோம்
நாம் ஒன்று செர்ந்துவிடுவோம் என்று
அப்போது எனக்கு புரியவில்லை
அது அவளுடன் கடைசி சந்திப்பு என்று

சிலமாதங்களில் உங்கள் வீடு மாற்றப்பட்டு
நீ சென்று விட்டாய் என்று எனது நண்பனின் மூலம் செய்தி வந்து !
தேடி சென்று பார்தேன் நாம் இருவரும் பேசிக்கொண்டு நடந்த
அந்த சாலை ஓர வீதிகளை அனைத்தும் வெறிச்சோடி இருந்தது !

காலத்தின் சுழற்சி பலவருடம் கடந்தது
ஒருநாள் ஆற்று பலத்தின் எதிர் புறத்தில் என்னை
ஒரு பெண்மணி என்னை கடந்து சென்றால்
அவள் யார் என்றால் அவள் தான் என்னவள்!

அப்போது ஒரு கைக்குழந்தை உன்னை அம்மா என்று கட்டித்தழுவியது
அப்போது புரிந்தது நீ ஒருவனக்கு மனைவி என்று
உன்னை நான் பார்த்தவுடன் என் கண்ணீர் மட்டும் பதில் சொன்னது
நீ நன்றாக வாழவேண்டும் என்று !

1 கருத்து:

நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்