பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

புதன், 31 மார்ச், 2010

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை

அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை

அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

தமிழகத்தில் பொற்கால ஆட்சி !


தமிழகத்தில் பொற்கால ஆட்சி !
விலைவாசி ஏற்றம் !
வேலை இல்ல திண்டாட்டம் !
மின்சாரம் தட்டுப்பாடு !
தனி நபர் சொத்து குவிப்பு !
அந்நியர்களின் கம்பெனி சுரண்டல் !
கொலை கொள்ளை கற்பழிப்பு !
மணல் கடத்தல் !
அரிசி கடத்தல் !
கட்டபஞ்சாயத்து ஆட்கள் கடத்தல் !
விவசாய கடன் தள்ளுபடி !
நான் என தவறு செய்தலும் ஒரு ஓட்டு தலைக்கு 2000 ரூபாய் உண்டு !

நானும், ஐந்து நட்சத்திர விடுதி விழாக்களும்


குளிரிலே நடுங்கி கைகால் விறைத்து போனது
நான் சாப்பிடும் உணவு என்னவென்று எனக்கு தெரியவில்லை
தெரியாமல் உணவு உட்கொண்டு !
பல பேரு பெருமைக்காக மடிகணினியை மடியில் வைத்து
தான் அங்கு கூட வேலையில் பெருமையை காட்டிக்கொண்டு!
எனது தாகம் தண்ணீர் என்று கூறி ஒரு பானத்தை அருந்தி கொண்டு !
கழிப்பிட வசதி கூட இல்லாமல்
அடுத்தவர்களுக்காக ஆடம்பரமாய் வாழும் ஒரு விடுதி !

திருமணத்திற்கு முன் காதல் வங்கியின் கவுன்சிலிங்!


விலை கொடுத்தாலும் வாங்க முடியாத அன்பை
விலை பேசி முன் பதிவு செய்து விட்டு ஆலோசனை கேட்கின்றனர்!

ஆம் ! அவர்களுக்கு எப்போது புரியும் !

காதல் என்பது பவர் பாயிண்ட் ஸ்லைடு களாக எடுத்து கூறுவது அல்ல !
இரு இதயங்களின் பிணைப்பு என்று !

அறிவியல் அதிசயமும் பெண்ணே உந்தன் காந்த விழிகளும் !



பெண் என்ற வார்த்தையை கேட்டவுடன்
நான் துருவங்களை விலகிச்செல்கிறேன் !

ஆனால் என்ன ஒரு அறிவியல் அதிசயம்!

உன் விழி எனும் காந்தத்தை கண்டு
என்னை அறியாமல் உன் பக்கம் இழுக்கசெய்கிறாய் !

என் காதலிக்கு எனது கண்ணீரில் பதில்


என் காதலிக்கு எனது கண்ணீரில் பதில்
பள்ளிப்படிப்பை முடித்து கல்லுரி முதல் ஆண்டு
கால் பதிக்கின்ற காத்திருக்கும் கால இடைவெளியில்
என்னவளைக் கண்டேன் !

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதிவிட்டு
தேர்வு முடிவு அறிவிப்பு வரும் வரை நான் எனது
சொந்தங்களின் உதவியுடன் ஒரு வேலைக்கு சேர்ந்தேன்
நான் வேலை செய்யும் இடத்தை நோக்கி வந்தால் என்னவள்!

நான் நிறைய புத்தகங்களில் படித்து இருக்குறேன்
காதல் ஈர்ப்பு என்னவென்று
உன்னை கண்ட மறுநொடி பொழுதுதில் என்னை நான்
மறைந்து விட்டேன் !

நீ தினமும் வரும் சாலையில்
நான் உன்னை பார்பதற்கு காத்திருந்த நாட்களை
அந்த பரபரப்பான நேரம் என் மனம் மட்டுமே
அறியும் !

நீ வராத நேரங்களில் சாலை ஓரம் எனது பார்வை
எத்தனை முறை பார்த்தது நீ வருவாய் என
எனக்கு மட்டும் தான் தெரியும் அந்த வலி
என் இதயத்துடிப்பை விட அதிகம் என்று !

உன்னிடம் நான் பேச வேண்டும் என்று
நினைக்கும் போது உன்னை பார்வையில்
என்னை கட்டி இழுத்து என்னை
தன் நிலை மறக்க செய்தாய்!

தேர்வும் முடிவு வந்து நான் தேர்ச்சி பெற்றேன் !
நல்ல கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது !
நான் மகிழ்ச்சி அடைந்தேன் ! காலம் முடிவு செய்தது
இதுதான் உனக்கு கடைசி மகிழ்ச்சி என்று எனது புரியவில்லை !

உன்னிடம் என் காதலை வெளிபடுத்தினேன்
நீ சரி என்றவுடன் எனக்கு நான் சொன்ன வார்த்தை
உன்னைவிட்டு பிரியப்போகிறேன் என்று ஏன் என்றாய் ?
படிப்பதற்கு என்றேன்!

காலத்தின் கட்டயத்தில் நாம் இருவரும் பிரிந்தோம்
நாம் ஒன்று செர்ந்துவிடுவோம் என்று
அப்போது எனக்கு புரியவில்லை
அது அவளுடன் கடைசி சந்திப்பு என்று

சிலமாதங்களில் உங்கள் வீடு மாற்றப்பட்டு
நீ சென்று விட்டாய் என்று எனது நண்பனின் மூலம் செய்தி வந்து !
தேடி சென்று பார்தேன் நாம் இருவரும் பேசிக்கொண்டு நடந்த
அந்த சாலை ஓர வீதிகளை அனைத்தும் வெறிச்சோடி இருந்தது !

காலத்தின் சுழற்சி பலவருடம் கடந்தது
ஒருநாள் ஆற்று பலத்தின் எதிர் புறத்தில் என்னை
ஒரு பெண்மணி என்னை கடந்து சென்றால்
அவள் யார் என்றால் அவள் தான் என்னவள்!

அப்போது ஒரு கைக்குழந்தை உன்னை அம்மா என்று கட்டித்தழுவியது
அப்போது புரிந்தது நீ ஒருவனக்கு மனைவி என்று
உன்னை நான் பார்த்தவுடன் என் கண்ணீர் மட்டும் பதில் சொன்னது
நீ நன்றாக வாழவேண்டும் என்று !

செவ்வாய், 9 மார்ச், 2010

அம்மா நீ மீண்டும் எனக்கு தாயாக வேண்டும் அம்மா !

உன் ரத்தத்தை பாலக புகட்டி சீராட்டி உணவு ஊட்டினாய்!
நான் பசிக்கும் பொது நீ என் அருகில் இருந்து
உணவு உண்ணாமல் எனக்கு உணவு ஊட்டினாய்!
நான் செய்யும் எவ்வளவு தவறுகளையும்
பொறுத்து கொண்டு என்னை
மண்ணிக்கும் குணம் உடைய
என் முதற்க்கண் கடவுளே !
எனது அடுத்த பிறவி என்று இருந்தால் !
நீ எனக்கு மீண்டும் தாயக பிறக்க வேண்டும் அம்மா !

கோடை வெயியலும் தெருக்குழாய் சண்டையும் !

எங்கள் தெருவில் வசந்தங்கள் மறைந்த அந்த கோடையில்
ஓரத்தில் சாக்கடைக்கு நடுவே மாடுகள் கட்டப்பட்ட இடத்தில்
கொசுக்கடியில் சாலை ஓரத்தில் சில பெண்மணிகள் பேசிக்கொண்டும்
சண்டை போட்டுக்கொண்டும் போர்கலமாய் காட்சி தரும்
அந்த இடம் எங்கள் ஏரியா தண்ணீர் பொது குழாய்!

ஒருகுடம் தண்ணீர் பிடிக்க ஆளுக்கு ஒரு கதைகள்
குழந்தை அழுகிறது !
எனது மகன் இன்னும் சாப்பிடவில்லை !
எனது கணவர் வேலை முடித்து வந்து இருக்கிறார் உணவு உண்ணவில்லை !
சமையலில் அரிசி வைத்து உள்ளேன் என்றும் எத்தனை யோ
புது புது கதைகள் நிஜங்களை மாற்றிக்கொண்டு தண்ணீர் பிடித்து விட்டு !
தெருக் குழாய் தினம் ஒரு போர்க்களமை தண்ணீர் பிடித்து கொண்டு செல்கின்றனர்