
விளை நிலங்கள் அனைத்தும் வீடு ஆகின !
மரங்கள் அனைத்தும் வெட்டபட்டன !
மருந்தே உணவு ஆனது !
மருத்துவமனை நோக்கி மனிதன் அலைந்தான் !
ஆசையால் துன்பத்தை உருவாக்கினான் !
புராணங்கள் வழிபாட்டு முறை மறந்தான் !
ஒருவனக்கு ஒருத்தி என்ற நீதி மாறியது !
காதல் அனைத்தும் பொய்யானது !
பெற்ற தாய் தந்தை மறந்தான் !
நண்பர்களிடம் பேசுவதற்கு நேரம் இல்லை என்றான் !
பொருள் தேடல் வாழ்க்கையானது !
தன்னை தன் புரிந்து கொள்ளாமல்
இயற்க்கை எனும் பாதையை மறந்து!
எந்திரமாக மாறி!
செயற்கை நோக்கி நடந்தான் !